| |
Online Support 9 AM to 6 PM IST
|
|
|
24 Hours Phone Support
|
| 91 - 44 - 56111702
|
Send this page to your friend!
|
|
|
|
|
|
அப்போ
|
அழகான முகம்... சிவப்பான நிறம்... இவையிரண்டும் இருந்தால் மட்டுமே நடிகையாக முடியும் என்றிருந்த தமிழ்சினிமாவில் களையான முகத்துடன் கறுப்பான நிறத்துடன் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்டர் வடிவுக்கரசி. இவரது பெயர் காரமமே சுவாரஸியமானது. பிரபல இயக்குனர் A.P. நாகராஜன் வடிவுக்கரசியின் உறவினர். இவர் இயக்கிய 'வடிவுக்கு வளைகாப்பு' படம் ரிலீஸான அன்று பிறந்தவர் என்பதால், இவருக்கு வடிவுக்கரசி என்று பெயர் சூட்டினார்களாம்.
சினிமாவில் நுழையும் முன் இவர் தூர்தர்ஷனில் பணிபுரிந்து வந்தார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. படம் 'சிவப்பு ரோஜாக்கள்'. இவரை கதாநாயகியாக உயர்த்தியது இயக்குனர் பாலகுருவின் 'கன்னிப்பருவத்திலே'.
ஜெ. மகேந்திரனின் 'மெட்டி', பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' சுந்தர் சி.யின் 'அருணாச்சலம' ஆகியவை வடிவுக்கரசி எனும் நடிகையின் திறமைக்கு தீனி போட்ட படங்கள்.
|
|
இப்போ
|
இப்போ
|
மனோராமாவை போன்று தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்கும் சொற்ப நடிகைகளில் வடிவுக்கரசியும் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், சீரியலைவிட சினிமாவே இவரது விருப்பம். தற்போது ரஜினியின் அம்மாவாக 'சிவாஜி'யில் நடித்து வருகிறார். 'ஆச்சார்யா' படத்தில் இதுவைர ஏற்றிராத பவர்புல் கேரக்டரை இவருக்கை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவி.
சாகும் வரை சினிமா மூச்சு போகும் வரை நடிப்பு என்று இருக்கும் வடிவுக்கரசி வெண்திரையில் இன்னும் சாதிப்பார் என்றே தோன்றுகிறது.
|
|
அப்போ
|
|
|
|
|
|
|
|
|
|
|
|