அப்போ இப்போ     -By JBR   - 16.10.2006
 
 
Menu

Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!


    
அப்போ
Srividhya

ஸ்ரீவித்யா பிரபலமான இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாயார் எம்.எல். வசந்தகுமாரி அந்த காலத்தில் சிறந்த பாடகியாக இருந்தவர். ஸ்ரீவித்யா குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமானது டி.ஆர். ராமண்ணாவின் 'நீ' படத்தில். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் குடும்பத்தாரின் வற்புறுத்துதலை மீறி இசைத்துறையை தவிர்த்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

இவரை முன்னணி நடிகையாக்கிய படங்களில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' மற்றும் 'அபூர்வ ராகங்கள்' முக்கியமானவை. சிவாஜி, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா.

புகழின் உச்சியில் இருந்தபோது ஜார்ஜ் என்ற கிறிஸ்தவரை காதலித்து மணந்து கொண்டார். இந்த காதல் திருமணமே அவர் துயரத்துக்கு ஆளாகவும் காரணமானது. தான் சம்பாதித்ததில் பெருமளவை இழந்து ஜார்ஜிடமிருந்து விவாகரத்து வாங்கினார். பிறகு மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இப்போ
இப்போ
Srividhya

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான பெரிய வீட்டை விற்று விட்டு திருவனந்தபுரம் சென்றார் ஸ்ரீவித்யா. சென்னையிலுள்ள அவரது பிளாட் மட்டும் இன்னும் அவர் பெயரிலேயே இருக்கிறது.

திருவனந்தபுரம் சென்ற பிறகு மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் 'அம்மா தம்புராட்டி' சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் ஐம்பதாவது எபிசோடை நெருங்கும் முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, சீரியல் ட்ராப்பானது.

எர்ணாகுளம் மாதா அமிர்தானந்த மயி மருத்துவமனையில் ஸ்ரீவித்யா முதலில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் தனக்கு நெருங்கியவர்களிடமும் தொடர்பு கொள்ளாமல் தனிமையில் இருந்ததால் ஸ்ரீவித்யாவுக்கு என்ன வியாதி என்பதே தெரியாமல் இருந்தது.

தற்போது திருவனந்தபுரம் உத்திரம் திருநாள் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவரை சந்திக்கச் சென்ற கமலிடம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் ஸ்ரீவித்யா. அவரை சந்தித்த கமல், "ஒருவரின் நோயை பற்றி வெளியே சொல்வது அநாகரிகம்" என்று தெரிவித்துவிட்டதால், ஸ்ரீவித்யாவின் நோய் குறித்த ரகசியம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

அவர் பூரண நலம்பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர இப்போது நாம் செய்யக்கூடியது எதுவுமில்லை!

அப்போ

 

 
Copyright © 2006   Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us