சினிமாவிலிருந்து விலகி தொலைக்காட்சி தொடரில் கவனம் செலுத்திவரும் தேவயானிக்கு இரண்டு வருடங்களுக்குமுன் பெண் குழந்தை பிறந்தது. தேவயானி-ராஜகுமாரன் தம்பதியினர் இனியா என்று அக்குழந்தைக்கு பெயர் வைத்தனர். அதேபெயரில் ஸ்டுடியோ ஒன்றும் ஆரம்பித்தனர்.
சென்னை சேத்துப்பட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் தேவயானிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதுவும் பெண். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததாக ராஜகுமாரன் தெரிவித்தார்.
இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார் ராஜகுமாரன்.
|