உதவி இயக்குனராக இருக்கும் மோகன்லாலின் கதையை திருடி கதாநாயகனாகிறார் சீனிவாசன். இறுதியில் தனது கதையை திருடிய சீனிவாசனை வைத்தே படம் இயக்கும் நிலை மோகன்லாலுக்கு வருகிறது.
தனது கதையை பறிகொடுக்கும் உதவி இயக்குனரின் பரிதாப வாழ்வை சொல்வதுதான் 'வெள்ளித்திரை' யின் கதை.
இந்த கதைக்கு நேர் எதிராக இப்படத்தின் கிளைமாக்ஸை ஆங்கில படமொன்றிலிருந்து 'சுட்டி' ருக்கிறார்கள்.
'உதயநானு தாரம்' படத்தின் கிளைமாக்ஸில், நடிக்க ஒத்துழைப்புதர மறுக்கும் சீனிவாசனை அவருக்குத் தெரியாமல் மோகன்லாலும் படப்பிடிப்புக் குழுவினரும் மறைந்திருந்து கேமராவில் ஷூட் செய்வார்கள். பதினைந்து நிமிடங்களுக்குமேல் வரும் இக்காட்சி ஹாலிவுட் படமொன்றிலிருந்து அப்படியே 'காப்பி' அடிக்கப்பட்டுள்ளது.
திருட்டின் வலியைச் சொல்லும் ஒரு படத்தின் கிளைமாக்ஸே இன்னொரு படத்திலிருந்து திருடப்பட்டது என்பதுதான் வேடிக்கை!
|