'கந்தசாமி' படத்தில் விக்ரமுடன் நடித்துவரும் இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக நடிக்கிறார.
ஜி.பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ஏற்கனவே தனுஷ் - ஸ்ரேயா இணைந்து நடித்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
'பொல்லாதவன்' படத்தை தயாரித்த குரூப் கம்பெனி கதிரேசன் அடுத்தப் படத்தை தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது.
இந்தப் புதிய படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இதற்காக அவருக்கு பெருந்தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது.
இந்த தகவலை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்!
|