ஜூனில் இந்திப் படம் - செல்வராகவன் உறுதி!
- 01.02.2008
By JBR
சினிமாவில் நுழையும் போதே, முதலில் கோலிவுட், பிறகு பாலிவுட், கடைசியில் ஹாலிவுட் என திட்டமிடலுடன் வந்தவர் இயக்குனர் செல்வராகவன்.
|
|
|
அவரது முதல் கனவு எப்போதோ நனவாகி விட்டது. இரண்டாவது கனவு ஜூன் மாதம் நனவாகப் போகிறது.
செல்வராகவன் இயக்கிவரும் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்சனையால் நின்றதும், பிறகு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நடுவில் சமரசம் பேசி, தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருப்பதும் தெரியும்.
விரைவில் படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இந்தப் படம் முடிந்ததும் விவேக் ஓபராயை வைத்து இந்தியில் படம் இயக்குகிறார் செல்வராகவன். ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார்.
தமிழில் வெற்றிபெற்ற '7G ரெயின்போ காலனி' தான் சில மாற்றங்களுடன் செல்வராகவனால் இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதையடுத்து 'புதுப்பேட்டை' படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
|