மயிலாடுதுறை பகுதியில் ஜூனியர் சிவாஜி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கும் 'சிங்கக்குட்டி' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அவர்கள் சென்னை செல்ல இருந்தனர்.
இந்த படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள், நடிகைகள், டெக்னிஷியன்கள் உள்ளிட்டோர் மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்கியுள்ளனர்.இந்நிலையில் இந்த ஓட்டலில் உரிமையாளர் தங்கும் அறையில் நேற்றிரவு 10.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினரும், தங்கியிருந்த மற்றவர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த தீ விபத்து பற்றி மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
|