Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமார்
- 01.08.2009
By Amalan
“பசங்கள வச்சி படம் இயக்குறாரே.. சின்னப்புள்ளத்தனமால இருக்கு” என குறைத்து எடைபோட்டவர்களையெல்லாம்கூட வாயார பாராட்ட வைத்துவிட்டார் ‘பசங்க’ பாண்டிராஜ்.
இந்த கதையை ஒரு டஜன் தயாரிப்பாளர்களிடமும் சொல்லி ரிஜக்டான பாண்டிராஜை, சரியாக கணித்து கைக்கொடுத்தது சசிகுமார்தான். யார் யாரெல்லாம் பாண்டிராஜ் சொன்ன கதைக்கு காதில் பஞ்சடைத்தார்களோ, அவர்களெல்லாம் ‘தம்பி நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணி தாங்க...’ என கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.
‘பசங்க’ வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ் இருக்கும் இடம் தேடி படையெடுத்து வந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை 15. ஆனால் பாண்டிராஜிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சசிகுமார் நிறுவனத்திற்கே மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.
தயாரிப்பு மட்டுமல்ல, நாயகனும் சசிகுமார்தான். நகரத்து பின்னணியில் எதார்த்தமும், வித்தியாசமும் நிறைந்த ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளாராம் பாண்டிராஜ். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
|