Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கலாமின் வாழ்க்கையை கதையாக்கும் விவேக்
- 01.07.2009
By Amalan
‘அக்னி சிறகுகள்’. கலாமின் வாழ்க்கையும், அவர் கடந்து வந்த பாதையையும் பதிவு செய்திருக்கும் இப்புத்தகம், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாய் இருக்கும் பொக்கிஷம்.
புத்தகமாக படிக்கும்போது அழுத்தமான திரைப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும் அக்னிசிறகுகள், திரைப்படமானால் எப்படியிருக்கும்? இப்படி யோசித்தது சின்னக்கலைவாணர் விவேக்தான். தனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் விவேக்.
இதற்கு அப்துல்கலாம் அனுமதி கொடுப்பாரா ? என்ற கேள்விக்கும் விடை கிடைப்பதும் பெரிய விஷயமில்லை. அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதே டெல்லி சென்று அவருடன் பல மணி நேரம் உரையாடிவிட்டு தன்னை பரிட்சயமாக்கிக் கொண்டார் விவேக். ஒரு தொலைக்காட்சிக்காக கலாமிடம் பேட்டியும் எடுத்திருக்கிறார். கலாமிற்கும் விவேக்கின் அனுகுமுறையும், திரைப்படங்களில் அவர் வைக்கும் முற்போக்கு சிந்தனைகளும் பிடிக்கும்.
எனவே விவேக்கின் முயற்சிக்கு கலாம் சம்மதிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்காது என்கின்றனர் விவேக்கின் நண்பர்கள், விரைவில் அப்துல் கலாமை சந்தித்து சம்மதம் வாங்கப் போகிறாராம் விவேக்.
கலாம் கிரீன் சிக்னல் காட்டும் பட்சத்தில், திரைப்படத்திற்கும் ‘அக்னி சிறகுகள்’ பெயரே வைக்கவேண்டும் என விரும்புகிறாராம் விவேக்.
|