'தசாவதாரம்' படத்துக்கு 1000 பிரிண்டுகள்
- 01.08.2007
By JBR
நாளுக்கு நாள் டாடா டைட்டானியம் கம்பெனியாக எதிர்ப்பார்ப்பு ஏறி வருகிறது. ஐம்பது கோடி, எண்பது கோடி என ஆளாளுக்கு ஒரு பட்ஜெட் சொல்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகயிருக்கும் 'தசாவதாரம்' படத்துக்குதான் இத்தனை எதிர்பார்ப்பு.
|
|
|
படத்தின் கதை குறித்தும், கமலின் பத்து கேரக்டர்கள் குறித்தும் இருநூறு பக்க நோட் அளவுக்கு செய்திகள் வந்துவிட்டாலும் கமலுக்கும், கே. எஸ். ரவிக்குமாருக்கும் மட்டுமே உண்மை தெரியும் என்பதே உண்மை.
படத்தில் எக்கச்சக்க கிராபிக்ஸ் காட்சிகள். இதனால் நான்கு கம்பெனிகளுக்கு வேலைகளை பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டு சென்னையில், இரண்டு மும்பையில்.
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் ரிலீஸாவதால் மொத்தமாக ஆயிரம் பிரிண்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். படத்தை குறித்து கமல், கே. எஸ். ரவிக்குமாரைவிட கான்பிடன்டாக இருப்பவர் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
'டைட்டானிக்' படம் மாதிரி இந்தப் படமும் உலகத்திலுள்ள எல்லா ரசிகர்களுக்கும் புரியும், புரிவது மட்டுமின்றி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சரி, போட்ட பணம் கிடைக்குமா?
ரவிச்சந்திரனின் கணிப்புப்படி முந்நூறு கோடிவரை படம் வசூலிக்குமாம்.
ஓவர் கான்பிடடென்ட்?
|