ஜெயம் ரவி - த்ரிஷா இணையும் 'சம்திங் சம்திங்' பூஜை - படங்களுடன்
01.09.2005
By: APS
'சம்திங்.. சம்திங்...' படத்தின் பூஜை இன்று ஏவி.எம்.ஸ்டுடியோவில் அமர்க்களமாக நடந்தது.
|
ஸ்ரீலட்சுமி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜெயம் கம்பெனி இணைந்து தயாரிக்கும் 'சம்திங்... சம்திங்...' படத்தை ரவி இயக்குகிறார். 'ஜெயம்' ரவி, த்ரிஷா முதன்முதலாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் பூஜையில் திரையுலகப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இயக்குனர்கள் சரண், மனோபாலா, எஸ்.ஏ. சந்திரசேகரன், கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், சிபிராஜ் தயாரிப்பாளர்கள் சூப்பர் குட் சௌத்ரி, ஏவிஎம் சரவணன், இப்ராஹிம் ராவுத்தர், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் கலந்துகொண்ட பூஜைக்கு படத்தின் நாயகி த்ரிஷா தனது தாயுடன் வந்திருந்தார். படத்தின் நாயகன் 'ஜெயம்' ரவி, இயக்குனர் ராஜா, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் ஆகியோர் பூஜைக்கு வந்திருந்தவர்களை வரவேற்றனர்.
தயாரிப்பாளர் தியாகராஜன் 'கிளாப்' அடிக்க, ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, த்ரிஷா நடித்த முதல் ஷாட் படமாக்கப்பட்டது. பிரபுதேவா தெலுங்கில் இயக்கி பெரிய வெற்றி பெற்ற 'நுவொஸ்தானென்டே...' படத்தின் ரீமேக்தான் 'சம்திங் சம்திங்'. தெலுங்கில் நாயகியாக நடித்த த்ரிஷாவே தமிழிலும் நடிக்கிறார். இதுபற்றி த்ரிஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
'சம்திங் சம்திங்' கதை பற்றி....
இது நல்ல காதல் கதை. காதலோட படத்துல உணர்ச்சிகரமான பேமிலி ட்ராமாவும் இருக்கு.
பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிச்சது பற்றி?
அவர் முதல் பட டைரக்டர் மாதிரியே தெரியல. 100 படம் பண்ணுன டைரக்டர் மாதிரி, டைரக்ஷ்ன்ல ரொம்ப தெளிவா இருந்தார்.
ரஜினிக்கு ஜோடியா சிவாஜில நடிக்கத் தயாரா?
வாய்ப்பு வரட்டும், பார்க்கலாம்.
தமிழ்ல நீங்க நடிக்க ஆசைப்படுற ஹீரோ?
கமல்ஹாசன்.
நல்லாதானே தமிழ் பேசுறீங்க. படத்துல உங்களுக்கு எதுக்கு டப்பிங் வாய்ஸ். நீங்களே பேசலாமே?
என்னோட தமிழ்ல இங்கிலீஷ் அக்ஸண்ட் வருது. இன்னும் 10 படங்களாவது தமிழ்ல பண்ணிட்டு பார்க்கலாம்.
மேடைல ஏன் தமிழ் தெரிஞ்சும் இங்கிலீஷ்ல பேசுறிங்க?
அது அவுங்க அவுங்க சாய்ஸ். எனக்கு சரளமா இங்கிலீஷ்லதான் பேச வருது.
வந்த வேலை முடிந்துவிட்டது என காமிராவை மூட்டைகட்டி முதல் தளத்திற்கு வந்தால், டைனிங் ஹாலில் அறுசுவை உணவு கமகமத்தது. திருமணத்திற்கு வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பாமல் மணமக்கள் வீட்டார் பந்தியில் அமரவைத்து உபசரிக்க ஏப்ப சத்தம் டைனிங் ஹாலை நிறைத்தது.
இன்று மாலை இதே மண்டபத்தில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள், கோலிவுட் பிரபலங்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
|