பொதுவாக மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கும், கமல், ரஜினி மாதிரியான நடிகர்களின் படங்களுக்குமே வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கும். முழுக்க புதுமுகங்களால் உருவான ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.
வெளிநாடுகளுக்கு முப்பத்தியிரண்டு பிரிண்டுகள் அனுப்பியுள்ளனர். பிறகு அது போதாமல் மேலும் சில பிரிண்டுகள் அனுப்பியுள்ளனர்.
புது முகங்களின் படம் ஒன்றிற்கு இத்தனை பிரிண்டுகள் போடுவது இதுவே முதல்முறை என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தாணு.
'சக்கரகட்டி'யின் இந்த சாதனைக்கு படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு காரணம் என்பதை சொல்லத்தேவையில்லை.
வெளிநாட்டில் மட்டுமின்றி உள்நாட்டிலும் 'சக்கரகட்டி'க்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் ரசிகர்கள். சென்னை பாக்ஸ் ஆபிஸில் 28 லட்சங்கள் வசூலித்து முதலிடத்தில் உள்ளது இப்படம்.
|