ராஜூசுந்தரம் முதன்முறையாக இயக்கும் படமென்பது இன்னொரு காரணம். படத்தில் அஜித்துடன் நவ்தீப், நயன்தாரா, சுஹாசினி, பியா ஆகியோரும் நடித்துள்ளனர். நவ்தீப் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளார். நவ்தீப்பின் அம்மாவாக சுஹாசினி. கல்லூரி முதல்வராக ஜெயராம். கல்லூரி லெக்சரராக நயன்தாரா நடித்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் நடித்த 'மெய்ன் ஹூன் நா' படத்தின் ரீ-மேக் இது.
ஐங்கரன் நிறுவனம் படத்தை தயாரி்ததுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற விஜயதசமி அன்று படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது வரும் ஒன்பதாம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர்.
படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாடல்களில் அதிகம் கவனம் எடுத்துள்ளார் ராஜூ சுந்தரம். ரிஸ்க்கான காட்சிகளிலும் டூப் போடாமல் அஜித் நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
|