|
|
|
|
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
’கோவா’வுக்கு கடன்;ரஜினி மகளுக்கு நோட்டீஸ்
- 01.12.2009
By Amalan
அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்கமதான் ‘கோவா’ படத்தை எடுத்து வருவதாக ஒரு பேட்டியில் செளந்தர்யா ரஜினி சொன்னது உண்மைதான் என்பதை இப்போது நம்பலாம்.
படமெடுப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி தராமல் இழுத்தடிப்பதாக செளந்தர்யா மீது வழக்கு போட்டிருக்கிறார் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் வருண் மணியன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சௌந்தர்யாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில்...
''இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோவா" திரைப்படம் எடுப்பதற்காக ஆக்கர் ஸ்டுடியோவின் இயக்குநர் சௌந்தர்யா, எனது நிறுவனத்தின் சார்பில் ரூ1கோடியே 10லட்சம் கடன் வாங்கியிருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பு 24 சதவீதம் வட்டியுடன் கடன் தொகையை திருப்பித்தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை வட்டி மற்றும் அசல் தொகை அளிக்கப்படவில்லை. பலமுறை கேட்டுப்பார்த்தும் அவர்கள் வழங்கவில்லை. சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு போன் செய்தால் தான் வெளிநாட்டில் இருப்பதாக இழுத்தடிக்கிறார். எனவே எனக்கு கொடுக்கவேண்டிய தொகை 24 சதவீதம் வட்டியுடன் அளிக்கவும் அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவும் உத்தரவிடவேண்டும்.”என கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி,டிசம்பர் 11 தேதி வரை ‘கோவா’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து செளந்தர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மகளின் கஷ்டத்தை உணர்ந்து ரஜினியே கடனை அடைக்காமலா போவார்!
|
|
|