அவரது சினிமா வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை ஒருபடத்துக்கு செலவிடுவது இதுவே முதல்முறை. இந்த நீண்ட இடைவெளியை சரி செய்ய கே.எஸ். ரவிக்குமார் அதிரடியாக சில திட்டங்கள் வைத்திருக்கிறார்.
ஏப்ரல் மாதம் 'தசாவதாரம்' படத்தை வெளியிட ஜரூராக வேலைகள் நடக்கின்றன. படம் வெளிவந்ததும் ராடன் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்குகிறார் கே.எஸ். படத்தின் ஹீரோ வேறு யாராக இருக்க முடியும். சரத்குமார்தான் நாயகன்!
அதே சூட்டோடு ஸ்டுடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். ஸ்டுடியோ ஸ்கிரீனின் முந்தையப் படமான 'பருத்தி வீரனில்' கார்த்தி நடித்தார். புதிய படத்தில் அவரது அண்ணன் சூர்யா நடிக்கிறார்.
'தசாவதாரம்' வெளியானதும் அடுத்தப் படத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக, 'தசாவதாரம்' போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடக்கும் போதே புதிய படங்களுக்கான கதை விவாதத்தை கே.எஸ். ரவிக்குமார் தொடங்கி விட்டார்.
இதே வேகத்தில் போனால் விட்டதை மட்டுமல்ல, அதற்குமேலேயும் பிடிப்பார்!
|