மீண்டும் 'ரத்தக்கண்ணீர்'
- 02.02.2008
By JBR
எம்.ஆர். ராதாவுக்கு அழியா புகழை தந்த படம் 'ரத்தக்கண்ணீர்.' திருவாரூர் தங்கராசுவால் எழுதப்பட்ட 'ரத்தக்கண்ணீர்' இன்றும் ராதா ரவியால் மேடையேறிக் கொண்டிருக்கிறது.
|
|
|
ஹீரோ ஆசையில் இருக்கும் விவேக்கிற்கு 'ரத்தக்கண்ணீரின்' ரீ-மேக்கில் நடிக்க வேண்டும் என்று ஆசை. திருவாரூர் தங்கராசுவும், நீங்க நடிச்சா நல்லாயிருக்கும் என்று விவேக்கை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.
'ரத்தக்கண்ணீரை' ரீ-மேக் செய்வதென்றால், அதில் எம்.ஆர். ராதா நடித்த வேடத்தில் நடிப்பதுடன், படத்தை தானே இயக்கவும் திட்டமிட்டுள்ளார் விவேக்.
இந்த பரிசோதனை முயற்சிக்கு பணம் போட நடிகர் ரஞ்சித் முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேலின் 'இந்திரலோகம்....' வெளிவந்து விட்டதால் விவேக்கின் 'ரத்தக்கண்ணீர்' அறிவிப்பு எந்நேரமும் வரலாம்.
ரசிகர்கள் உஷார்!
|