தனது அடுத்தப் படத்துக்காக ஹாங்காங்கில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அஜித். அவருக்கு யாரை ஜோடியாக போடுவது என்று மண்டையை உடைத்துக் கொணடிருந்தார் முதல்முறையாக படம் இயக்கும் ராஜூ சுந்தரம்.
ஸ்ரேயா, பிபாசாபாசு என ஒரு ரவுண்ட் வதந்திகளுக்குப் பிறகு உண்மை ஜோடி கிடைத்திருக்கிறது.
சல்மான்கானின் காதலியான கத்ரினா கைஃப், சல்மான் இந்தி 'போக்கிரி' படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது அவரைப் பார்க்க அவரது பின்னாலேயே சென்னை வந்தார். அப்போது கைஃபை பார்த்து கதை சொல்லியிருக்கிறார் ராஜூ சுந்தரம்.
இத்தனைநாள் நடிப்பதா வேண்டாமா என ஆழமாக சிந்தித்து, அஜித்துடன் நடிப்பது என அழகான முடிவை எடுத்திருக்கிறார்.
வடக்கிலிருந்து வரும் நடிகைகள் இங்கு பெரிதாக பேசப்பட்டதில்லை. கத்ரினா அதனை மாற்றுவாரா?
|