நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், மாறன் படத்தில் நடித்துள்ளார். இவர் மீது பெண் இயக்குனர் ஸ்டெபி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ரகுவண்ணன் தன்னுடன் நெருக்கமாக இணைந்திருப்பதைப் போன்ற படங்களை ஸ்டெபி வெளியிட்டார்.
ஸ்டெபியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வரதட்சணை தடுப்பு போலீஸ் உதவி கமிஷனர் முத்தமிழ் மணி விசாரிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக டைரக்டர் சீமான் தன்னை மிரட்டுவதாக ஸ்டெபி கூறி இருந்தார். இது குறித்து சில பத்திரிகைகளுக்கு ஸ்டெபி பற்றி சீமான் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த கருத்துகள் பற்றி ஸ்டெபி தனது வக்கீல் மூலம் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில கூறப்பட்டு இருப்பதாவது :-
என்னைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துகள் மிகவும் அவதூறானவை. அவற்றால் எனது மனது புண்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே, என்னைப்பற்றி கூறிய அவதூறுக் கருத்துகளுக்காக நீங்கள் 10 நாட்களுக்குள்என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மீது குற்ற வழக்கு தொடருவேன்.
|