'மாஸ்கோவின் காவிரி' நிற்கவில்லை : மறுக்கும் ரவிவர்மன்
- 02.05.2008
By Amalan
ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'மாஸ்கோவின் காவிரி'. இப்படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் ரவிவர்மனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டன.
|
|
|
ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என மறுத்துள்ளார் ரவிவர்மன். படம் பற்றி அவரிடம் பேசியபோது :-
"போர்க்களம்ங்றது வெற்றிபெற்றவனோட வரலாறு. காதல் தோல்வியடைந்தால்தான் வரலாறு. இந்த வரலாற்றுக்குள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. பல விஷயங்களை கண்டுபிடிச்சிருக்கான் மனிதன். ஆனா, காதலை கண்டுபிடிச்சவன் யாரு அது உணர்வு. உள்ளுக்குள்ள இருந்து பொங்கி பொங்கி, வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குற ரசாயணம். ரஷ்யாவில் இருக்குது மாஸ்கோவாங்கற நதி. இந்த ஆற்றங்கரையில பிறந்ததுதான் மாஸ்கோ நகரம். இந்த நதி எப்பவும் குளிர்ந்துதான் இருக்கும். நம்ம காவிரி தண்ணி கொஞ்சம் சூடா இருக்கும். இப்படியிருக்கிற ரெண்டு கேரக்டர்கள் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதே கதை. விஷூவலா இந்தப் படம் ரொம்ப புதுமையா இருக்கும். வண்ணங்கள் சொல்லித்தர்ற கவிதையை இதுல வித்தியாசமா காட்சிப்படுத்தியிருக்கேன். ஹீரோ, ஹீரோயினாக ராகுல் ரவீந்திரனும், சமந்தாவும் அறிமுகமாகிறார்கள்." என்கிறார் ரவிவர்மன்.
தயாரிப்பாளருக்கும் உங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானதே?
கேள்வியை முடிக்குமுன் சூடான ரவிவர்மன், "எனக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தான். அப்படியிருக்கும்போது தேவையில்லாமல் இப்படியொரு செய்தியை பரப்பி விடுவது யாரென்று தெரியவில்லை. எனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இப்போதுகூட படப்பிடிப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு முடிந்துவிடும்" என்றார்.
|