ஜி.ஏ.இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் காயத்ரி தயாரிக்கும் இப்படம் 'நீலகண்டா' என்ற பெயரில் கன்னடத்திலும், தெலுங்கிலும் வெற்றிப்படமானது.
'பருவராகம்' ரவிசந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நமீதா கதாநாயகி. மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார். ரவிச்சந்திரன், நமீதா, ஸ்ரீதேவிகா தவிர சீதா, சுஜாதா மற்றும் முன்னணி கலைஞர்கள் பலர் நடிக்கிறார்கள்.
'பிரம்மாண்டம்' படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நமீதா. எந்தப்பொருள் மீது ஆசைப்பட்டாலும் அதை உடனே அடைந்துவிட வேண்டும் என்று நினைக்கிற நமீதா, ரவிச்சந்திரனை ஒரு தலையாய் காதலிப்பதோடு அவரை அடையவும் நினைக்கிறார். ரவிச்சந்திரனோ ஸ்ரீதேவிகாவை மணந்து கொள்கிறார்.
தனக்கு ரவிச்சந்திரன் கிடைக்காதகேபத்தில், அவரது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் பல வழிகளில் அவருக்கு தொல்லை கொடுக்கிறார் நமீதா. அடாவடிப்பெண்ணாக நமீதா தரும் தொல்லைகளை ரவிச்சந்திரன் எப்படி சமாளிக்கிறார் என்பதே பிரம்மாண்டம் படத்தின் கதையாம்.
கதாநாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்திற்கு ரவிச்சந்திரனே இசையமைத்திருக்கிறார்.
|