இந்தி படத்தில் மைக் டைசன்
- 02.06.2007
By JBR
'ஃபூல் அண்ட் பைனல்' என்ற இந்தி படம் ரிலீஸாகியிருக்கிறது. இதன் விசேஷம் மைக்டைசன். குத்துச்சண்டையில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து, ஹோலி பீல்டிடம் உதை வாங்கி, எதிராளியின் காதை கடித்து, கற்பழிப்பு புகாருக்கு உள்ளாகி, ஜெயிலில் 'மரம் ஏறுகிறவர்' என சக கைதிகளால் கிண்டல் செய்யப்பட்ட அதே மைக் டைசன்.
|
|
|
'ஃபூல் அண்ட் பைனல்' படத்தை அகமதுகான் இயக்கியிருக்கிறார். இதன் பெரும்பான்மையான காட்சிகள் பிரெசிலிலும் துபாயிலும் படமாக்கப்பட்டன.
சன்னி தியோல், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் இவர்களுடன் சமீரா ரெட்டியும் இப்படத்தில் நடித்திருக்கிறார். மைக் டைசனை படத்தில் நடிக்க வைத்தது பற்றி கேட்டதற்கு,
"மைக் டைசன் உலகம் முழுவதும் அறிந்த பெயர். அவரை நடிக்க வைப்பதன் மூலம் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க முடியும்" என்றார் அகமதுகான் ஓபனாக.
இவர் கூறியது உண்மை என்பதற்கு சான்றாக படத்தில் ஊறுகாய் அளவுக்கே மைக் டைசனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஊறுகாயான உலக சாம்பியன்!
அட, இந்த டைட்டில்கூட நல்லாயிருக்கே!
|