Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
எங்கே நிம்மதி... இமயமலையில் விஷால்
- 02.07.2009
By Amalan
தொடர் தோல்விகளால் நொந்து நூடுல்ஸான விஷால், அமைதி தேடி சென்றுள்ள இடம் இமயமலை.
‘சத்யம்’ சத்ய சோதனையாகவும், ‘தோரணை’ வேதனையாகவும் அமைந்தது விஷாலுக்கு. எப்படி படம் தோற்றது? எங்கே தப்பு நடந்தது? என்ற கேள்விகளும், ஆராய்ச்சிகளுமாக கிட்டத்தட்ட விஷால் அனு விஞ்ஞானியை போல ஆழந்த யோசனைக்கு தள்ளப்பட்டார்.
பட்ட காலிலேயே பட்டு பாதிப்புக்குள்ளான விஷாலுக்கு அமைதி காணும் யோசனையை சொன்னது ஸ்ரேயாதான். சமீபத்தில்தான் ஸ்ரேயா இமயமலை சென்று திரும்பினார். இந்த செய்தியை பத்திரிகை வாயிலாக தெரிந்துகொண்ட விஷால், ஸ்ரேயாவிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். ஸ்ரேயாவும் தனது அனுபவங்களை மடைதிறந்ததுடன் “நீங்க ஒருமுறை போய்ட்டு வாங்க. எல்லாம் நன்மைக்கே” என குட்டி சாமியாராக பேச, அடுத்த நாளே இமயமலைக்கு புறப்பட்டுவிட்டாராம் விஷால்.
விஷாலின் அடுத்த படம் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ இதனை திரு இயக்குகிறார். இவர் அகத்தியனின் மருமகன் ஆவார். விஷாலின் இமயமலை பயணமும், தியானமும் ‘திராத விளையாட்டு பிள்ளை’க்கு வெற்றி தேடித்தரும் என்று நம்புகின்றனராம் விஷாலின் பெற்றோர்.
உத்ராட்சம் வாங்கிட்டு வாங்க விஷால்!
|