கைக்குட்டை to காக்கிசட்டை: வளரும் முமைத்கான்
- 03.03.2007
By Amalan
முமைத்கான். கோடம்பாக்கத்தில் லேட்டஸ்டாக கலக்கிவரும் கவர்ச்சி அணுகுண்டு. குவா... குவா... சப்தம் போட்டது மும்பை என்றாலும் இப்போது இவர் பாலம் போடுவது ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்திற்கும் 'இடை'யேதான்.
|
|
|
அனுராதா, சில்க்ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, ரகசியா காலங்கள் போய் முமைத்கானின் சீசன் ஆரம்பித்துள்ளது. போக்கிரியில் இளையதளபதியுடன் கட்டிப்பிடி ஆட்டம் போட்டவர், 'லீ'யில் 'நான் ஒரு மாதிரிடா....' பாடலுக்கு சிபியையும் கூடவே ரசிகர்களையும் மயக்கிய கவர்ச்சி புயல். அதனைத் தொடர்ந்து 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்திலும் ஆட்டம்போட்டுள்ளார்.
கவர்ச்சியிலேயே காலத்தை ஓட்டிடலாம்னு திட்டமா? கேட்ட நிமிஷத்திலேயே பதில் சுனாமியை வீச ஆரம்பிக்கிறார் முமைத்.
"நீங்களா அப்படி முடிவு பண்ணிக்காதீங்க, நடனம் மட்டுமல்ல எனக்கு நடிக்கவும் தெரியும். 'எவடைதே நேகண்டி' என்னும் தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கேன்.
'ஆபரேஷன் துரியோதனா' படத்தில் அரசியல்வாதியாக நடிச்சிருக்கேன். தமிழிலும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் அடிச்சு தூள் கிளப்புவேன்" என தொடை தட்டுகிறார் ஸாரி இடை தட்டுகிறார் முமைத்கான்.
தமிழ் ஹீரோயின்கள் கவனிக்கவும்!
|