நவ்தீப்-மோனிகா நடிக்கும் 'அ ஆ இ ஈ'
- 03.05.2008
By Amalan
'அறிந்தும் அறியாமலும்', 'நெஞ்சில் ஜில்ஜில்' உள்ளிட்ட படங்களி்ல் நடித்துள்ள நவ்தீப் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் 'அ ஆ இ ஈ'.
|
|
|
ஏவி.எம்.புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஏவி.எம்.குமரன் தயாரிக்கும் இப்படம் தெலுங்கு படத்தின் கதை. ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய 'சந்தமாமா' என்ற தெலுங்கு படமே தமிழுக்கு ஏற்ப கதை, திரைக்கதை மாற்றம் செய்யப்பட்டு எடுக்கப்படவுள்ளது.
இப்படத்தில் நவ்தீப்க்கு ஜோடியாக மோனிகா நடிக்கிறார். 'சிலந்தி' படம் மூலம் கிளாமராக நடிக்க ஆரம்பித்துள்ள மோனிகா இதிலும் கவர்ச்சி விருந்து படைக்கவுள்ளராம்.இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் சிவபாலாஜி, சரண்யாமேரி, வி.எம்.சி.ஹனிபா, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அருள்தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்ஆண்டனி இசையமைக்கிறார். கதை,திரைக்கதை, கிருஷ்ணவம்சி. வி.ஐ.பி.படத்தை இயக்கிய சபாபதி இயக்குகிறார்
|