பிச்சை எடுக்கும் குழந்தைகள் பற்றி வினயன் இயக்கும் படம்
- 03.05.2008
By Amalan
'காசி', 'என் மன வானிலே' படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் வினயன், அடுத்து ஜனசேவா பிலிம்ஸ் சார்பில் ஜோஸ் மாவேளி தயாரிக்கும் 'நாளை நமதே' படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.
|
|
|
பூஜை முடிந்ததும் படம் பற்றி வினயன் கூறியதாவது:-
"'நாளை நமதே' நான் இயக்கும் 3வது தமிழ் படம். 'காசி' போல் இதுவும் வித்தியாசமான படம். இந்தியாவில் 10 கோடி பேர் வீடு இல்லாமல், அரசின் உதவியும் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஆதரவற்ற எத்தனையோ குழந்தைகளை கடத்தி, துன்புறுத்தி பிச்சை எடுக்க வைக்கின்றனர். அவர்களின் உண்மை கதையை சொல்லும் படமிது.
கேரளாவில் ஜனசேவாசிஷூபவன் என்ற ஆசிரமம்., பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு தருகிறது. அங்கிருக்கும் குழந்தைகள் தான் இதில் நடிக்கினறனர். பட நாயகன்களாக ராம், ஷர்வானந்த், கதாநாயகியாக தனுஷா நடிக்கின்றனர். பரத்வாஜ் இசை அமைக்கிறார்.
பலரும் ஒதுக்கிதள்ளும் இதுபோன்ற கதைகளை செய்ய வேண்டும் என்பதை என் ஆசை. சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்கினால், அது சிறைக்குள் சிக்கியதுபோல்தான். அப்படங்களை இயக்க வரைமுறை, கட்டுப்பாடு இருக்கும். என் பாணியிலான படங்களை இயக்கும்போது சுதந்திரமாக செயல்பட முடிகிறது."
|