செல்வா இயக்கத்தில் மாதவன் நடிக்கும் 'குரு என் ஆளு'
- 03.05.2008
By Amalan
திரைக்கதையில் கமர்ஷியல் கபடி ஆடும் வித்தை தெரிந்த இயக்குனர் செல்வா இம்முறை மாதவனுடன் கூட்டு சேர்ந்துள்ளார். ஆனால் மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி கமல் இல்லை. 'சிவப்பதிகாரம்' மம்தா.
|
|
|
'ஆலயதீபம்', 'துடிக்கும் கரங்கள்', 'ஜானி', 'தீர்ப்பு', 'சிவப்பு ரோஜாக்கள்', 'கடல் மீன்கள்', 'மின்சார கண்ணா' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கே.ஆர்.ஜி. இவரது கே.ஆர்.ஜி,மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் 'குரு என் ஆளு' படத்தில்தான் மேற்கண்ட கூட்டணி கைக்கோர்கிறது.
இரண்டாவது கதாநாயகனாக அப்பாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக பிருந்த பராக் நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த்தேவா இசையில் பா.விஜய், பழனிபாரதி, கபிலன் பாடல்களை எழுதுகின்றனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கேரளா, சென்னை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பாடல்காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
|