அமீருக்கு சினிமா பிரஸ்கிளப் எடுத்த பாராட்டு விழா
- 03.05.2008
By Amalan
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பருத்தி வீரனுக்கு சிறப்பு விருது கிடைத்ததையொட்டி இயக்குனர் அமீருக்கு சினிமா பிரஸ்கிளப் சார்பில் நேற்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
|
|
|
இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, அகத்தியன், சேரன், சீமான், லிங்குசாமி, சுப்பிரமணிய சிவா, எடிட்டர் மோகன், தயாரிப்பாளர் கே.எஸ். சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
கலைப்பூங்கா ராவணன் தலைமையில், ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில் நடந்த விழாவில் ஆதிராஜன் வரவேற்புரையாற்றினார். பெர்லின் விருது பற்றிய அறிமுக உரையை அமலன் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து சினிமா பிரஸ்கிளப் விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜா அமீருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
"நானே பதிவு செய்யாத என் கிராமத்தை மதுரையில் வாழ்ந்த, அதிலும் டவுனில் வாழ்ந்த அமீர் பதிவு செய்தது எனக்கு வியப்பை அளித்தது என குடும்பத்தோடு பருத்தி வீரன் படத்தை பார்க்க போயிருந்தேன். வெளியே வந்து வெகு நேரமாகியும் நானும் என் மனைவியும் இந்த படத்தை பற்றி எதுவுமே பேச முடியாமல் வீட்டுக்கு வந்தோம். சிறிது நேரம் கழித்து என் மனைவி என்னிடம், இத்தனை வருடம் சினிமாவில் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க என்று கேட்டார். இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தை எடுத்த அமீருக்கு பத்திரிகையாளர்களே சேர்ந்து விருது கொடுக்கிறார்கள் என்றால், இது பெர்லின் விருதை விட பெரியது அமீருக்கு என வாழ்த்துக்கள் என்றார்."
|