இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் மெகா பிரச்சனை ஒன்றுதான கதையாம்.இதில் பசுபதியை நடிக்க வைக்கப் போகிறாராம் உதயபானு. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
'சந்தை' தொடங்கும் முன்பே கவிஞர்கள் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக படத்தில் வரும் சிச்சுவேஷன்களுக்கு ஏற்றபடி இசையமைப்பாளர் டியூன் போடுவார். பாடலாசிரியர்கள் அதற்கேற்ப வரிகளை போடுவார்கள்.
சிலநேரம் இது உல்டாவாக நடக்கும். பாடலாசிரியர் எழுதிய வரிகளுக்கு இசையமைப்பாளர் டியூன் போடுவார். 'சந்தை'யில் இந்த இரண்டும் இல்லாமல் மூன்றாவது வழியை பின்பற்றுகிறார் உதயபானு.
பாடலாசிரியர் சினேகன் எழுதிய புத்தகம், பெண்கள் இன்னும் அழகாய் இருக்கிறார்கள் ஆகிய இரண்டு கவிதை புத்தகங்களிலிருந்து தனக்குத் தேவையான கவிதைகளை தேர்ந்தெடுத்து இசையமைப்பாளரிடம் தரப்போகிறாராம் இயக்குனர் உதயபானு.
ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை தங்கள் படத்தில் இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்வது ஒன்றும் புதுமையில்லை. 'அலைபாயுதே'யில் வரும் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்...' பாடல், வைரமுத்து ஏற்கனவே எழுதி பிரசுரமான கவிதை. சிச்சுவேஷனுக்கு பொருந்தியதால் மணிரத்னம் அதனை பயன்படுத்தினார். ஆனால், ஒரு படத்தின் மொத்தப் பாடல்களையும் இப்படி எடுத்துக் கொள்வது இதுதான் முதல்முறை!
|