முதல கேசட்டை பெற்றுக் கொண்டு நடிகை ரேவதி பேசியதாவது:-
குழந்தைகளைப் பற்றி நிறைய பேசுகிறோம், எழுதுகிறோம், சிந்திக்கிறோம், கல்வி போதிக்கிறோம் ஆனால், அவர்களுக்காக திரைப்படம் எடுக்க யாரும் யோசிப்பதில்லை. இந்த படத்தை துணிச்சலோடு எடுத்திருக்கிறார்கள்.
"இப்போது குழந்தைகளுக்கு நிறைய பிரஷர் கொடுக்கிறோம். அவர்களது குழந்தைத் தனத்தை அங்கீகரிக்க மறுக்கிறோம். நான் அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு செல்வதுண்டு. அங்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. நான் அத்தகைய விடுதிக்கு செல்லும்போது குழந்தைகள், பில்லர்களை போன்று நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிப் பேச வேண்டும் இப்படிப் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களை பெரியவர்களாக மாற்ற வேண்டாம். குறைந்த பட்சம் 12 அல்லது 13 வயது வரையிலாவது அவர்கள் குழந்தையாகவே இருக்கட்டும்" என்று பேசினார்.
"இதுமாதிரியான சினிமா முயற்சி என்பது மிகவும் அரிதாகிவிட்டது. இன்றைய வியாபார உலகத்தில் இப்படியொரு படைப்பை இயக்க முன்வந்த அழகப்பன் சி.யின் துணிச்சலு்க்கு நான் தலைவணங்குகிறேன். சினிமாவை வியாபாரமாக நினைக்கும் வியாபாரிகளுக்கு கலை பற்றி கவலையில்லை. தமிழ் சினிமா வேறொரு தளத்திற்கு போகவேண்டுமென்றால் தயவு செய்து டூயட் பாட்டு போடுவதை நிறுத்துங்கள். யதார்த்த்மான காட்சிகளை வையுங்கள்" என தனது பேச்சில் ஆதங்கத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தினார் இயக்குனர் மகேந்திரன்.
விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, அமீர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர்கள் பாலாசிங், சித்தார்த் நடிகை மாதவி சர்மா குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி பாடலாசிரியர் பழநிபாரதி, நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு ரேவதி பரிசு வழங்கினார். குழந்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள் இல்லம் நடத்துபவர்களுக்கு பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
முன்னதாக படத்தின் இசை அமைப்பாளர் ரேஹான் வரவேற்றார். முடிவில் இயக்குனரும் தயாரிப்பாளருமான அழகப்பன் சி நன்றி கூறினார்.
|