சொனாட்டான் இசை நிறுவனம் பற்றி மீண்டும் ஒரு முன்னுரை கொடுப்பது சூரியன் உதிப்பது கிழக்கில் என்பதுபோலாகிவிடும் என்பதால் இம்முறை அந்நிறுவனம் தரயுள்ள புதிய சேவை பற்றி மட்டும் சொல்லிவிடுவதே சாலச்சிறந்தது.
இணையதளம் மூலமாகவே திரைப்பட பின்னணி இசையை டவுன்லோடு செயது கொள்ளும் புதிய சேவை பற்றி சொனாட்டானின் இந்திய பிரதிநிதியான லேகா ரத்னகுமார் விளக்கியதாவது :-
"பின்னணி இசைக்காக நாள் கணக்கில் மெனக்கெட்டு, லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டிய அவசியமெல்லாம் இப்போது இல்லை. www.sonoton.com என்ற இணையதளத்தில் ஆயிரக்கணக்கான பின்னணி இசை டிராக்குகள் இருக்கிறது.
ஒரு சினிமாவிற்கு பின்னணி இசை தேவைப்படும் பட்சத்தில் இந்த இணையதளத்திற்குள் சென்று தேவையான டிராக்குகளை அதனதன் பிரிவுகளுக்கு சென்று இலவசமாக கேட்கமுடியும். நமக்கு பிடிக்கும் டிராக்குகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
டவுன்லோடு செய்வதற்கு இந்திய மதிப்பில் ரூ. 50,000 கட்டி பாஸ்வேர்டு வாங்கவேண்டும். ஒருமுறை கட்டிய பணத்திற்கு பத்து டிராக்குகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆக ஒரு படத்திற்கான பின்னணி இசை 50 ஆயிரம் ரூபாய்க்குள் அமைத்துவிடமுடியும்.
தசாவதாரம் படத்திற்கு மொத்தம் 13 டிராக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தேன். பெரிய படமான இதற்கு 13 டிராக்குகள் போதும் என்ற நிலையில் சராசரி படங்களுக்கான பின்னணிக்கு 10 டிராக்குகளே போதுமானதாக இருக்கும். இப்போது பாக்யராஜ் தனது படத்திற்கான பின்னணி இசையை sonoton சேவை மூலமாகத்தான் அமைத்துள்ளார். இதுபோல சில இய்ககுனர்களும் பின்னணி இசையை அமைக்க ஆர்வமாக உள்ளனர்" என்றார்.
|