Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
நான் இளவரசி : சந்தியா சந்தோஷம்
- 03.07.2009
By Amalan
சந்தியாவின் அத்யாவசியங்களில் ஒன்றாக தேவைப்படுவது திருப்புமுனை. இரண்டு ஆண்டுகளாக ஜீரோ வாட்ஸ் பல்பாகவே இருக்கிறது இவரது கேரியர். இப்போ நல்லநேரத்துக்கான நாள் நெருங்கிவிட்டதாக சந்தோஷப்படுகிறார்.
இந்த வருஷம் மட்டும் சந்தியாவின் கைகளில் நான்கு படங்கள். ஆப்தரக்ஷகா (சந்திரமுகி இரண்டாம் பாகம்), ‘ஓடிப்போலாமா’, ’நூற்றுக்குநூறு’, ‘இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்’ அந்த லிஸ்டில் அடங்கும். ஆப்தரக்ஷகா ஷூட்டிங் முடித்த கையோடு ‘இ.கோ.மு.சி’ படத்திற்கு மேக்கப் போட தொடங்கிவிட்டார்.
“இந்த படத்துக்கு பழைய சந்தியாவாக இருக்கக்கூடாது புதுத் தோற்றத்துடன் வரனும்” என இயக்குனர் சிம்புதேவன் போட்ட கட்டளையை ஏற்று உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என ரொம்ப ஃபிரஸ்ஸா மாறிவிட்டாராம் சந்தியா.
மலைவால் மக்களின் இளவரசி கேரக்டர்தான் சந்தியாவுக்கு. மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட கீரிடத்தை அணிந்து கொண்டு கேமரா முன்பு நின்றால் நிஜமாகவே இளவரசியாகவே மாறிவிடுகிறாராம். அடுத்தவாரம் சேலத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம். இன்னும் வசீகர தோற்றத்திற்காக அழகுகலை நிபுணரின் ஆலோசனை கேட்டு ஹோம்வொர்க் செய்துவரும் சந்தியா முகத்தில் சந்தோஷம் கலைகட்டுகிறதாம்.
|