Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
ஆதியின் ‘அய்யனார்’
- 03.07.2009
By Amalan
தூக்கி கட்டிய லுங்கியோடு பத்மப்ரியாவை பந்தாடிய மிருகம் ’ஆதி’யை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது என்றாலும், வாய்ப்புகள் என்னவோ வரவில்லை.
இவரது தந்தை தெலுங்கில் தயாரிப்பாளராக இருப்பதால் ஆதிக்கும் யாரிடமும் வாய்ப்பு கேட்க தன்மானம் தடுத்தது. இந்நிலையில் ஆதியை தன் படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் தேனப்பன். ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் தேனப்பன் தயாரிக்கும் படத்தில் ஆதிதான் ஹீரோ.
படத்திற்கு ‘அய்யனார்’ என பெயரிடப்பட்டுள்ளது (பொருத்தம்தான்) ஆதி ஜோடியாக ‘வால்மீகி’ மீராநந்தன் நடிக்கிறார். சந்தானம், சூரி (’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சிரிக்கவைத்தவர் ) காமெடி டிராக்கிற்கு கால்ஷீட் கொடுத்துள்ளனர்.
திட்ரைப்பட கல்லுரி மாணவர் ராஜமித்ரன் படத்தை இயக்குகிறார். இன்னும் இரண்டொரு நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் மதுரையில் படமாகிறதாம். சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ‘பாய்ஸ்’ படத்தில் குண்டு பையனாக வந்த தமன் இசையமைக்கிறார்.
|