Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...’
- 03.07.2009
By Amalan
‘குணா’ கமலிடம் கொடுத்திருந்தால் பாட்டாகக்கூட படித்திருப்பார். தபூசங்கரின் காதல் கவிதைகள் அத்தனை பிரசித்தம். “எதை கேட்டாலும் வெட்கத்தைத் தருகிறாய்... வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?” இப்படியொரு கேள்வி கேட்டால் எந்தவொரு பெண்ணாக இருந்தாலும் காதலை தந்துவிடுவாள். தபூசங்கரின் காதல் வரிகளுக்கு அத்தனை வலிமை உண்டு.
கவிஞர்களுக்கும் , காதலர்களுக்கும் பரிட்சயமான ’வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்’ என்ற வரிகளையே தனது படத்திற்கு தலைப்பாக்கியுள்ளார் கவிஞர். யெஸ்! தபூ இப்போ இயக்குனரும்கூட. சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக இருந்த அனுபவத்தில் காதல் மணக்கும் ஒரு கதையை இயக்குகிறார்.
சில்வர் ஜூப்ளி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘குங்கும் பூவும் கொஞ்சும் புறாவும்’ ராமகிருஷ்ணன் நாயகன். அவரது ஜோடியாக புதுமுகம் வெண்ணிலா நடிக்கிறார். BIG Fm தினாவும் இப்படத்தில் மேக்கப் போடுகிறார். இயக்குனர் K.செல்வபாரதியும் நடிகராகிறார்.
ஒன்லைன் சொல்வதற்கே யோசிக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் தபூசங்கர் கொஞ்சம்கூட தாமதிக்காமல் படத்தின் கதையை பக்கம் பக்கமாக சொல்வதிலிருந்தே திரைக்கதையின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை தெரிகிறது.
“ஜாலியான லவ் ஸ்டோரிதாங்க நம்ம படம். லவ் செண்டிமெண்டோ, காதலர்களுக்கு எதிராக கம்பு சுத்தும் வில்லனோ இல்லாத புதுசாகவும் ரொம்ப தினுசாகவும் திரைக்கதை இருக்கும்” என அவரது கவிதையை போலவே ரொம்ப இலகுவாக சொல்கிறார் தபூசங்கர்
|