தனுஷின் நவீன திருவிளையாடல்
03.09.2005
By:JBR
காதல் மனைவியுடன் இரவு நேரம் மோட்டார் சைக்கிளில் ஆனந்தமாக சுற்றுகிறார் தனுஷ். இடைப்பட்ட நேரத்தில் புதுப்பேட்டை ஷூட்டிங். இவை தவிர, பொதுநிகழ்ச்சிகளுக்கோ, பத்திரிகை பேட்டிகளிலோ தலைகாட்டுவதில்லை இவர்.
|
நல்ல கதை, வித்தியாசமான கேரக்டர், மோசமில்லாத வெற்றி... தற்போதைய தனுஷின் குறிக்கோள்கள் இவை. 'அது ஒரு கனாக்காலம்' முடிந்துவிட்டது. 'புதுப்பேட்டை' படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் ஒரு படம்.
நிதானமாக அடியெடுத்து வைப்பவர் மேலுமொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதலபாதாளத்தில் சரிந்து கொண்டிருந்த தனுஷின் மார்க்கெட்டை இழுத்துப் பிடித்தப்படம் 'தேவதையை கண்டேன்'. இதன் இயக்குனர் பூபதிபாண்டியன் இயக்கும் புதிய படம் 'நவீன திருவிளையாடல்'. இதில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கிறார்.
நூறு சதவிகிதம் ரசிகர்களின் சந்தோஷத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது நவீன திருவிளையாடலின் கதை. இதில் தனுஷின் ஜோடியாக ஷ்ரியா நடிக்கலாம். 'மழை' படத்திற்குப் பிறகு தெலுங்குதேசம் சென்ற ஷ்ரியாவுக்கு திருவிளையாடல் திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள்.
விரைவில் 'நவீன திருவிளையாடல்' முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.
|