ஐங்கரனும் ஜீ.வி.பிலிம்ஸூம் இணைந்து 'நந்தலாலா'வை தயாரிக்கின்றன. முதல் முறையாக இதில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின். அம்மாவை தேடிய இருவரின் பயணம்தான் 'நந்தலாலா'. மிஷ்கின் இயக்கிய மற்ற இரு படங்களை விட அனைத்து விதங்களிலும் மாறுபட்ட படம் என்பதால் படத்துக்கு நிறைய எதிர்பார்பபு.
படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கியது. மிஷ்கின், ஸ்னிக்தா உள்ளிட்டோர் படப்பிடி்பபில் கலந்து கொண்டார்கள்.
இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். படம் ஜப்பான் படமான 'கிக்கிஜிரோ'வின் தழுவலா என்ற கேள்விக்கு பதிலளித்தவர். படம் வந்தபிறகு படத்தை பார்தது தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.
|