உத்திரபிரதேசத்தை சேர்ந்த இவரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் ராஜூசுந்தரம். 'ஏகன்' படத்தில் நவ்தீப்பிற்கு ஜோடியாக நடிக்க பியாவை ஒப்பந்தம் செய்தார் ராஜூ சுந்தரம். ஆனால் ஏகனுக்கு முன்பே இவர் நடித்த 'பொய் சொல்ல போறோம்' வெளியானது.
அடுத்து ஷக்தி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளர் பியா. 'ஐந்தாம் படை' படத்தை இயக்கும் பத்ரி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு 'எங்க வீட்டு பிள்ளை' என பெயர் வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே நேரம் எம்.ஜி.ஆரின் எங்க வீ்ட்டு பிள்ளையை தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர்.
வரிசையாக படங்கள் ஒப்பந்தம் ஆவதால் சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார் பியா.
|