இன்று காலை ரஜினி தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன் யாத்ராவுடன் திருப்பதி கோயிலுக்கு வந்தார்.
அங்கு ரஜினியின் பேரன் யாத்ராவுக்கு முடி காணிக்கை செலுத்தப்பட்டது. முதல்முறை செலுத்தப்படும் முடி காணிக்கை என்பதால் குடும்பத்துடன் வந்திருந்தார் ரஜினிகாந்த்.
நேற்று இரவே திருப்பதி வந்த் ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் இரவு கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்தச் செய்தி ரசிகர்களிடம் பரவியதால் இன்று காலை ரஜினி கோயிலுக்கு வந்தபோது அவரைக்காண பக்தர்கள் திரண்டனர்.
இதனால் ரஜினி சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அதிகாரிகள் பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருந்தது.
|