மீண்டும் தங்கர் இயக்கத்தில் சத்யராஜ்
- 04.02.2008
By JBR
'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' படங்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தாலும் கலெக்ஷ்ன் என்னவோ கம்மிதான்.
|
|
|
வெறுத்துப்போன தங்கர்பச்சான் முன்னணி ஹீரோக்களுக்கே இனி படம் செய்வது என சபதம் எடுத்தார். படவிழாக்களில், தங்கர்பச்சான் இயக்கத்தில் நடிக்க ஆசை என விஜய் போன்றவர்கள் சொன்ன பலத்தில்தான் இந்த சபதத்தை எடுத்தார்.
ஆனால், கதை சொல்லவா என தங்கர் கேட்டாலே முன்னணிகள் பின் வழியாக ஓடி விடுகிறார்கள். இதனை லேட்டாகப் புரிந்து கொண்டவர், விரலுக்கேற்ற வீக்கமாக, மீண்டும் சத்யாராஜை வைத்து படம் இயக்குகிறார்.
'தங்கம்', 'பொள்ளாச்சி மாப்பிள்ளை', என லொள்ளு கேரக்டர்களில் நடித்த அலுப்புத்தீர, தங்கரின் கதைப்படத்தில் நடிக்க சத்யராஜூம் ஆவலாக உள்ளாராம்.
கதை என்ன, கதாநாயகி யார் என்பதான விவரங்களை தங்கர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
|