பி.வாசுவின் மெகா திட்டம்
- 04.02.2008
By JBR
குறுகியகால தயாரிப்பு என்றாலும் 'குசேலன்' படத்தை பிரமாண்டப்படுத்துவது என்ற முடிவில் இருக்கிறார் பி.வாசு.
|
|
|
படத்தில் ரஜினி நடிகராக வருவதால் ஒரேயொரு பாடல்காட்சியில் மட்டும் கமல், விஜய், விக்ரம், அஜித் என எல்லா நடிகர்களையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் பி.வாசு.
ஷாருக்கானின் 'ஓம் சாந்தி ஓம்' படத்தில், ஒரு காட்சியில் 32 பாலிவுட் நடிகர்கள் தோன்றுவார்கள். வாசுவின் ஐடியாவுக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன்.
குசேலனின் தெலுங்கு பதிப்பில் ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா ஆகியோரை நடிக்க வைப்பது எனவும் தீர்மானித்துள்ளார் பி.வாசு.
இப்படியொரு திட்டம் இருப்பினும் இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசவில்லை என்றார் வாசு.
ரஜினிக்கு என்றால் மறுக்கவாப் போகிறார்கள்!
|