இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ஐங்கரன் இன்டர் நேஷனல்ஸ் வாங்கியுள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனத்துக்கு கைமாறியுள்ளது.
ராஜூசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'மே ஹூன் னா' வின் ரீ-மேக் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் நிலவுகிறது. எனினும் இதனை ஐங்கரன் நிறுவனமோ ராஜூசுந்தரமோ இன்னும் உறுதி செய்யவில்லை.
புதிய படத்துக்காக ஹாங்காங் சென்ற அஜித் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூலை வரும் ஆறாம் தேதி தொடங்க ராஜூசுந்தரம் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்கிறார்.
|