எனது படங்களிலேயே இப்படியொரு வசூலை கண்டதில்லை என்று கமலையே வியப்படைய வைத்துள்ளது தசாவதாரம். திரையிட்ட இடங்களிலெல்லாம் பழைய வசூல்சாதனைகளை உடைத்துக் கொண்டு ஓடுகிறது.
வசூல் சக்ரவர்த்தி எனப்படும் ரஜினியின் சிவாஜி வசூலை பல இடங்களில் தசாவதாரம் முறியடித்துள்ளது. ஜாம்பவான்களின் பாராட்டைவிட கமலுக்கு இந்தசேதிதான் முக்கியம். பல ஆண்டுகளாக அவர் கண்டுவந்த கனவல்லவா இது!
சென்னையை பொறுத்தவரை சென்றவாரம் வெளியான 'ஆயுதம் செய்வோம்' முதல்வர இறுதியில் பத்துலட்சத்திறகும் குறைவாகவே வசூலி்த்தது. அதேநேரம் தசாவதாரத்தின் வசூல் ஏறக்குறைய எண்பத்து மூன்று லட்சங்கள்! பதினேழு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்த வசூல் 4.88 கோடிகள். இது சிவாஜி 17 நாட்களில் வசூலித்ததை விட அதிகம்.
வெளிநாடுகளிலும் சாதனைபடைத்து வருகிறது கமல்படம். வெளிநாடுகளைப் பொறுத்தவரை இரண்டுவார இறுதியில் சிவாஜியின் மொத்த வசூல் 3,705.252 டாலர்கள். இரண்டு வார இறுதியில் தசாவதாரத்தின் வசூல் 11,653,212 டாலர்கள். ஏறக்குறைய எட்டுலட்சம் டாலர்கள் அதிகம்.
ஐம்பதுநாளில் சென்னையில் மட்டும் தசாவதாரம் பத்துகோடி வசூலிக்கும் என நம்புகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
|