சினிமா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வருடத்துக்கு பத்து படங்களாவது முக்கோண காதல் கதையுடன் திரைக்கு வருகிறது. இவற்றில் பெறும்பாலானவை, இரண்டாவது வாரத்தையே எட்டிப் பிடிப்பதில்லை.
அறிமுக இயக்குனர் எம்.டி.முத்துவின் 'புதிய பயணமும்' ஒரு முக்கோண காதல்கதை. அக்காவின் கல்யாணவாழ்க்கை அலங்கோலமானதை அருகிலிருந்து பார்க்கிறார் நாயகி. ஆண்கள் என்றாலே அவளுக்கு வெறுப்பு.
இந்த நேரத்தில் வசதி வாய்ப்புகள் எதுவுமின்றி கஷ்டப்படும் நாயகனை சந்திக்கிறாள். அவனது நல்லகுணம் கண்டு அவனுக்கு உதவுகிறாள். படிப்படியாக அவனை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்துகிறாள்.
இப்போது தான் உருவாக்கிய நாயகன் மீது நாயகிக்கு காதல் மலர்கிறது. அதனை அவனிடம் சொல்ல நினைக்கையில் திடீர் ட்டுவிஸ்ட்.
நாயகியை தேடி அவளது உயிர் தோழி வெளிநாட்டிலிருந்து வருகிறாள். தோழியை பார்த்ததும் நாயகனுக்கு அவள்மீது மையல். இறுதியில் யார் யாரை ஏற்றுக் கொண்டார்கள் என்பது சுவராஸியமான கிளைமாக்ஸ்.
வழக்கமான முக்கோண காதல் கதையிலிருந்து 'புதியபயணம்' முற்றிலும் மாறுபட்டது என்றார் இயக்குனர் முத்து.
எந்தவகையில் என்பது படம் வெளியானதும் தெரியவரும்!
|