இந்த ஆண்டின் முதல் ஆறுமாதத்தில் ஐம்பத்தைந்து நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாயின. இதில் 'அஞ்சாதே', 'யாரடி நீ மோகினி', 'சந்தோஷ் சுப்ரமணியம்' தவிர வேறு எந்தப்படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாக அமையவில்லை. தசாவதாரம் நல்ல கலெக்ஷனுடன் ஓடினாலும், ஐம்பது நாட்களுக்குப் பிறகே அதன் லாபம் குறித்து தெளிவாக கூறமுடியும்.
சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் மீடியம் பட்ஜெட் படங்களின் வெற்றிவிகிதம் இந்த வருடம் குறைவு. இந்நிலையில் இன்று இரண்டு மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன. (உளியின் ஓசை மெகா பட்ஜெட்).
சுப்ரமணியபுரம் எம்.சசிகுமாரின் முதல்படம். இந்தக் கதையை படமாக்க தயாரிப்பாளர் கிடைக்காமல் அவரே துணிந்து தயாரிப்பாளராகியிருக்கிறார். எண்பதுகளில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற உடை, தோற்றம், லொக்கேஷன், பேக்ட்ராப் என போஸ்டர்களே ஈர்க்கின்றன.மொகாஸ்டார்கள் இன்றி வெளியாகும் இப்படம் வெற்றி பெறுவது தமிழ்சினிமா இன்டஸ்ட்ரியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திருமுருகனின் இரண்டாவது படம். எம்மகன் என்ற நான் - நான்சென்ஸ் படம் தந்ததால் முனியாண்டி மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பரத், பூர்ணா நடித்திருக்கும் இப்படத்தில் வடிவேலுவின் ரோல் முக்கியமானது. வித்யாசாகர் இசை.
உலகமே நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கால காட்டத்தில் கிராமத்து கலைக்கல்லூரி வாழ்க்கையை சொல்கிறது முனியாண்டி. இந்த கதை ஜெயிப்பது காலத்தின் கட்டாயங்களில் ஒன்று.
|