த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா
- 04.07.2008
By JBR
த்ரிஷா, இலியானா இருவரையும் சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளினார் நயன்தாரா.
|
|
|
மலையாளத்தில் வெளியான மனசின் அக்கரை திரைப்படமே நயன்தாராவின் முதல்படம். இதில் ஏழை கம்யூனிச தம்பதியின் ஒரே மகளாக நடித்திருந்தார் நயன். ஜெயராம், செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்த மனசின் அக்கரையில் அறிமுகமான நயன்தாரவின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பானது.
இதற்கு அடித்தளமாக அமைந்தது ஹரியின் 'ஐயா'. சரத்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்த இந்ததப் படமே நயன்தாராவின் முதல் தமிழ்ப்படம். பிறகு ரஜினி ஜோடியாக சந்திரமுகி. அத்தோடு தெலுங்கிலும் முன்னணி நடிகையானார். சிம்புவுடனான காதல் விவகாரத்தில் சிறிதுகாலம் முடங்கிப் போனாலும், அவரது திரும்பிவரவு பிரமாண்டமாக இருந்தது.
'பில்லா'வில் கிளாமரில் கலக்கியவர், 'யாரடி நீ மோகினி'யில் குணச்சித்திர வேடத்தில் கலங்கடித்தார். 'குசேலன்', 'சத்யம்', 'ஏகன்', 'வில்லு' என இப்போதைக்கு இவர்தான் கோலிவுட்டின் டாப் ஹீரோயின்!
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகைகள் த்ரிஷா, இலியானா வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. சுமார் 1.2 கோடி என்கிறது கோடம்பாக்கம். குசேலன் வெளிவந்தால் இந்த சம்பளத்திற்கும் சிக்கமாட்டார் நயன்தாரா என்பதுதான் நிலைமை.
|