'தீ', 'பெருமாள்', 'ஐந்தாம்படை' படங்களுக்குப் பிறகு சுந்தர் சி. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் படத்தில் நடிக்கிறார். 'வாடா' என பெயர் வைத்திருக்கும் (சப்-டைட்டில் பேஸ் டூ பேஸ்) இப்படத்தில் சுந்தர் சி. ஜோடியாக நடிக்க ப்ரியாமணியிடம் பேசப்பட்டது.
இளம் கதாநாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லி, கால்ஷீட் கேட்க வந்தவர்களின் முகத்துக்கு நேராக கதவை சாத்தியிருக்கிறார்.
இவர் போனால் இன்னொருவர். இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கீதா பஸ்ரா என்ற கொழுகொழு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். பஸ்ராவுக்கு இது முதல் தமிழ்ப்படம். தவிர தமி்ழின் அரிச்சுவடியே இவருக்கு தெரியவில்லை. இதனால் ஆள்வைத்து தமிழ் டியூசன் சொல்லித்தர ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஏ. வெங்கடேஷின் ஆஸ்தான வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம். இசை தினா என்றார்கள். அவரும் ஒரு ரீ-மிக்ஸ் உள்பட ஐந்து பாடல்களுக்கு டியூன் போடுவதில் மும்முரமாக இருந்தார்.
இப்போது என்ன ஆனதோ தினாவை தூக்கிவிட்டு டி.இமானை போட்டிருக்கிறார்கள். சுந்தர் சி.யின் குடும்பப் படங்களுக்கு இமானே இசையமைப்பாளர். அந்தப் பாசத்தில் தினாவை தூக்கியிருக்கலாம் என்கிறார்கள்.
அர்ஜூனை வைத்து இயக்கும் 'துரை' முடிந்ததும் 'வாடா' வை தொடங்குகிறார் ஏ.வெங்கடேஷ்!
|