சென்னை சாந்தோம் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேராயர்கள், பங்கு மக்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் பேசிய போது.
சிறுபான்மையினர் என்று சொல்லப்படும் பெரும் பிரிவினர் நடத்தும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப்போதெல்லாம் எங்கள் ஆட்சிக்கு சிறுபான்மை ஆட்சி என்று தான் பெயர். அது எவ்வளவு பெருமைமிக்கது என்பதை அறிவீர்கள்.
தோமையாரை 'தோமைய்யர்' என்று அழைக்கிறோர். அய்யா என்பதால் ஒருபிரிவு மக்களை அழைப்பதாக கொள்ளக்கூடாது. சிறந்தவர், உயர்ந்தவர் என்ற பொருளில் அழைப்பதாகும்
கடவுளை கருணாநிதி ஏற்பாரா என்று கேட்பது கடவுளுக்கு அவமானம். கடவுள் என்னை ஏற்கும் வகையில் நடந்து கொள்கிறேனா என்பதே முக்கியம். பாரி மன்னனை தோற்கடித்த சேர, சோழ, பாண்டியர் பெயர்கள் தெரியாது. ஆனால் பாரியின் பெயர் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. தோமையாரை சதி செய்து கொன்றார்கள். அவரை கொன்றவர்கள் பெயர் தெரியாது ஆனால் தோமையார் பெயர் நிலைத்திருக்கிறது என்றார்.
புனித தோமையார் இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் சென்னை வந்தபோது மயிலாப்பூரில் வசித்து வந்த திருவள்ளுவரை சந்தித்ததாக கதைகள் கூறப்படுகின்றன. தோமையார் படத்தில் இது இடம் பெறுகிறது. திருவள்ளுவர் வேடத்தில் நடிக்க ரஜினியிடம் கேட்கப் போவதாக நேற்று செய்தி கிளம்பியதால், கூட்டத்தினரிடையே பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.
|