சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சியொன்று ஆலம்பரா கோட்டையில் எடுக்கப்பட்டது. கஜனுடன், மீரா ஆடிப்பாடும் இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியிருந்தார்.
"டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாருடா அட நீயும் நீனும் மிங்கிளானா சூப்பர் ஸ்டாருடா..."
என்ற அந்தப் பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார். மொத்தம் நான்கு நாட்கள் மூன்று கேமராக்களை பயன்படுத்தி இந்தப் பாடலை எடுத்தனர். மீரா ஜாஸ்மின் சீனியர் நடிகை என்பதால் அவருடன் நெருக்கமாக நடிக்க தயங்கியிருக்கிறார் கஜன். அவர் தயக்கத்தை போக்கி பாடல் சிறப்பாக வர உதவியவர் மீராதானாம்.
படத்தில் வரும் சேஸிங் காட்சியிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மீரா. ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்துள்ளார் கருணாஸ்.
|