இசையமைக்க படங்கள் குவிவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் ஹீரோவாக நடிக்க இவரை மொய்க்கிறார்கள்.
இசையமைத்துக்கொண்டே பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதையெல்லாம் உதாரணமாக கூறி ஆன்டனியின் மனதை மாற்றவும் முயற்சி நடக்கிறது.
இசைப்பயணம் நல்ல படியாக போவதால் நடிப்பதற்கு இதுவரை க்ரீன் சிக்னல் காட்டவில்லை விஜய் ஆன்டனி. இந்தியில் ஹிமேஷ் ரேஷ்மையா படங்களில் நடித்துக் கொண்டே இசையமைக்கவும் செய்கிறார். அவரைதான் ஆன்டனியிடம் உதாரணமாக காட்டுகிறார்கள் நடிக்க அழைப்பவர்கள். அதையெல்லாம் இதுவரை புத்திசாலித்தனமாக தவிர்த்து வருகிறார் ஆன்டனி.
ஆனால் நாளை எதுவும் நடக்கலாம்.
|