பிகினியில் நமிதா
- 05.02.2008
By JBR
'கோவில்பட்டி வீரலட்சுமி' எடுத்த இயக்குனர் ராஜேஷ்வர், வீரம் எல்லாம் வெற்றிக்கு உதவாது என வீரத்தை ஓரமாக ஒதுக்கிவைத்து எடுக்கும் படம் 'இந்திர விழா'.
|
|
|
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு நமிதா, மாளவிகா என இரண்டு ஜோடிகள். ஜோடிகளை பார்த்தாலே 'இந்திரா விழா' எந்தமாதிரி என்பது புரிந்து விடும்.
நமது புரிதலுக்கு தகுந்தபடி பிகினி உடையில் நமிதா ஒருகாட்சியில் தோன்றுகிறார். 'பில்லா' வில் நயன்தாராவே பிகினி போட்டாயிற்று, நாம் போட்டால் என்ன என்று தைரியமாக பிகினி போட்டியில் குதித்துள்ளார் நமிதா.
இவருக்குப் போட்டியாக மாளவிகா என்னச் செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.
'பூ', 'எட்டப்பன்' படங்களை முடித்த பிறகு 'இந்திர விழா' படத்தில் நடிக்கிறார் ஸ்ரீகாந்த். அப்படியானால் நமிதாவின் பிகினி உடையைப் பார்க்க நாளாகுமே என்று கவலைப்படுகிறீர்களா?
பொறுத்தார் பூமி ஆள்வாரோ இல்லையோ கண்டிப்பாக பிகினி காண்பார். ஆகவே பொறுங்கள்!
|