தமிழில் 'முகலே ஆஸம்'
- 05.02.2008
By JBR
1960 -ல் இந்தியாவை கலக்கிய கறுப்பு வெள்ளைப்படம் தமிழில் வெளிவருகிறது. கறுப்பு வெள்ளைப் படம் தமிழிலா என ஆச்சரியமாக இருக்கிறதா?
|
|
|
திலீப்குமாரின் 'முகலே ஆஸம்' அது வெளியானபோது 'அக்பர்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 45 வருடங்களுக்குப் பிறகு, 'முகலே ஆஸம்' படத்தை தொழில்நுட்பம் மூலம் வண்ணப்படமாக்கி மீண்டும் இந்தியில் வெளியிட்டனர். சிறப்பு அனுமதியுடன் பாகிஸ்தானில் வெளியிடப்பட்ட இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
வண்ணத்துக்கு மாறிய முகலே ஆஸம்மை மீண்டும் தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். அதற்கான டப்பிங் வேலைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. தமிழில் 'அனார்கலி' என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
ஏறக்குறைய அரை செஞ்சுரி தாண்டிய இப்படம் தமிழர்களை கவருமா என்பதை அறிய, 'அனார்கலி' தயாரிப்பாளர் ஆவலாக இருக்கிறார்.
|